கொழும்பிற்கும் மும்பைக்கும் இடையில் இரு விமான சேவைகள் அறிமுகம்

143 0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பிற்கும் மும்பைக்கும் இடையில் இரண்டு விமான சேவைகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையை இன்று திங்கட்கிழமை (04) அறிமுகப்படுத்தியுள்ளது.

UL 142 மற்றும் UL 144 ஆகிய இரண்டு விமான சேவையானது தினமும் மும்பையில் இருந்து கொழும்புக்கு  3:10 மணி மற்றும் 20:45 மணியளவிலும் கொழும்பில் இருந்து மும்பைக்கு UL 141 மற்றும் UL 143 ஆகிய விமானங்கள் மூலம்  23:45 மணி மற்றும் 17:10 மணியளவிலும்   வழங்கப்படும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மும்பையிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு கொழும்பு வழியாக சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்காக், லண்டன், பிராங்பேர்ட், பாரிஸ், மெல்போர்ன் , தூர கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களுக்கு செல்ல மிகவும் வசதியாக உள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உலகளாவிய விநியோகத் தலைவர் திமுத்து தென்னகோன் கூறுகையில்,

உலகின் மிகப்பெரிய வெளிச்செல்லும் பயணச் சந்தைகளில் ஒன்றாக மாறிய இந்தியாவின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான மும்பையுடன் இணைந்து செயற்படுவதால் சுற்றுலாத்துறையின் வருவாய் அதிகரிக்கப்படும். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கியதையடுத்து எங்களது வருவாய் அதிகரித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சேவையானது இந்தியாவின் பெங்களூரில் நடந்த தெற்காசிய பயண விருதுகளில் அங்கீகரிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியாகும் என மேலும் தெரிவித்தார்.