அலவ்வவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றில் பயணித்த ஒருவர் பொல்கஹவெல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொல்கஹவெல – கந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார்.
இவர் காயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

