ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான பில்கேட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு துபாயில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.
துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP 28) போதே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பில்கேட்ஸ்க்கு இடையில் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

