விசேட வியாபார பண்ட வரி தொடர்பில் வெளியான வர்த்தமானி

183 0

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், வெண்ணெய், பாலுற்பத்தி பொருட்கள் பலவற்றுக்கு விசேட வியாபார பண்ட வரியை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், நிதியமைச்சு இதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

சல்மன் மீன், தோடம்பழம், முந்திரிகைப் பழம், யோகர்ட், அப்பிள் பழம், வெண்ணெய் உள்ளிட்ட பாலுற்பத்திகள், பேரீச்சம்பழம் போன்றவற்றுக்கான விசேட வியாபார பண்ட வரி விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.