குருணாகலில் வீடொன்றில் வெடிப்பு சம்பவம் ; மூவர் கைது

164 0

குருணாகல் – ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கப்பிட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் ரிதிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டடவர்கள் பசுவத்த , குருமட மற்றும் நிக்கப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 36 ,47 மற்றும் 72 வயதுடையவர்கள் ஆவர்.

குறித்த வெடிப்பில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பு இடம்பெற்ற வீடானது மிகவும் பழைமைவாய்ந்தது எனவும் அங்கு வயோதிபர் ஒருவர் வசித்து வந்துதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சில வெடி பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் ரம்படகல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 48 மணிநேரம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.