போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

196 0

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, இன்றையதினம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சென்று வாக்குமூலம் வழங்கிய நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.