சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விழிப்புணர்வு நடைபவனி

173 0

தேசிய பாலியல் நோய் – எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச எயிட்ஸ் தின நடைபவனி இன்று வெள்ளிக்கிழமை (01) கொழும்பு ‍ஹைட் பார்க்கில் இடம்பெற்றது.

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பாலியல் ரீதியான நோய் மற்றும் எயிட்ஸ் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனி நகர மண்டபம், சுகாதார அமைச்சு வழியாக புஞ்சி பொரளை, மருதானை பொலிஸ் நிலையம், காமினி ஹோல் வழியாக மீண்டும் ஹைட் பார்க்கை வந்தடைந்தது.