தெகிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திஸ்ஸமகாராம மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை சேர்ந்த 26 மற்றும் 46 வயதுடையவர்கள் ஆவர்.
இவர்கள் தெகிவளையில் மூன்று வீடுகளை உடைத்து கொள்ளையிட்டமை, நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை, கொகுவலவில் பண அபகரிப்புக்களை மேற்கொண்டமை மற்றும் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை ஆகிய பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
தெகிவளை மற்றும் கொகுவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் 13 கிராம் 600 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், வங்கிக்கணக்கு அட்டைகள் மற்றும் பித்தளை சிலை ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெகிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

