இலங்கை செவிபுலனற்றோர் மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேரிடம் 104 இலட்சம் ரூபா மோசடி!

27 0

இலங்கை செவிபுலனற்றோர்  மத்திய சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேரிடம் 104 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேக நபர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் நேற்று செவ்வாய்க்கிழமை செயலாளர் அனில் ஜயவர்தன செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள்  முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இலங்கை செவிபுலனற்றோர்  சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேர் ஒரு கோடியே நானூற்று முப்பத்தி இரண்டாயிரத்து நூற்று பதினைந்து ரூபாவை   தனியார் நிறுவனம் ஒன்றில் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இருப்பினும் இதற்கான வட்டித்  தொகையையோ அல்லது வைப்பிலிடப்பட்ட  பணத்தையோ குறித்த நிறுவனம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.