மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டமுறு வனப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (27) வன விலங்குகளுக்காக பிரயோகிக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் மட்டக்களப்பு – கதிரவெளி பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபராவார்.
இவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் துப்பாக்கி சூட்டை பிரயோகித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

