அக்குறணை நகர் வெள்ள நீரில் மூழ்குவதை தடுக்க முடியாது

35 0

அக்குறணை நகரில் சட்ட விரோதமான முறையில் கட்டப்பட்டிருக்கும் 66 வீடுகளையும் அகற்றும் வரைக்கும்  வெல்ல நீரில் அக்குரணை நகர் மூழ்கடிக்கப்படுவதை தடுக்க முடியாது.

அதனால் ஒட்டு மொத்த அக்குரணை நகரையும் மழை நீரில் இருந்து பாதுகாக்க 66பேரையும் அகற்றவேண்டி ஏற்படுகிறது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு , வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் வசந்த பண்டார எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தாெடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அக்குரணை பிரதேசத்தில் தேங்கும் மழை நீர் கிகா ஓயா மற்றும் மஹகல ஓயா ஆகிய இரண்டு வாவிகள் ஊடாகவே மழை நீர் வழிந்தோட இருக்கிறது.

அங்கு 66 வீடுகள் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அந்த 66 சட்ட விராேத வீடுகளையும் அகற்றுமாறு நாங்கள் மாவட்ட செயலாளர். பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளிம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். அந்த சட்டவிராேத 66 வீடுகள் காரணமாகவே முழு அக்குரணை நகரமும் நீரில் மூழ்கிறது.

அதனால் 66 பேரையும் நாங்கள் திருப்திப்படுத்த முற்படுவதால் முழு அக்குரணை நகரையும் மூழ்கடிக்கச்செய்ய எங்களுக்கு இடமளிக்க முடியாது.

அத்துடன் இது சட்ட விராேத கட்டிடம், இதற்கு காணி உறுதிப்பத்திரம் இல்லை, அந்த  இடத்தில் வீடு கட்டுவதற்கான அனுமதி சான்றிதழ் இல்லை, இதற்கு மாற்று வழியாக நகரில் பெறுமதியான இடங்களில் காணி அல்லது வீடு கேட்கின்றனர். அதனை செய்ய முடியாது.

எனவே சட்ட விரோதமான முறையில் கட்டப்பட்டிருக்கும் 66 வீடுகளையும் அகற்றும் வரைக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.அதனால் ஒட்டு மொத்த அக்குரணை நகரையும் மழை நீரில் இருந்து பாதுகாக்க 66பேரையும் அகற்றவேண்டி ஏற்படுகிறது என்றார்.