வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராமத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தினையும் உரிய மக்களிடமே வழங்குவதற்கு சகல தரப்புக்களும் இணங்கியுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.இது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக் கிராம்மாகிய வீரபுரம் கிராமத்தில் ஜே. ஆர் அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களில் 400 குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட தலா ஒரு ஏக்கர் வீதமான நிலப்பகுதியினை சிவில் பாதுகாப்பு படையினரும் பின்னர் குடியிருப்பிற்காகவும் அபகரிப்பதாக அதன் உரிமையாளர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அவ்வாறு முன்னர் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருந்த 400 ஏக்கர் நிலத்தில் இருந்தும் அப்பகுதி மக்கள் 1990ம் ஆண்டு யுத்தம் காரணமாகவே கைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டிருந்த்து.
இதனை இன முரண்பாடுகள் இன்றி எமது நிலத்தினை எமக்கே பெற்றுத்தாருங்கள் என அப்பகுதி மக்கள் கோரியதற்கிணங்க உடனடியாகவே அவை தொடர்பில் ஆராயப்பட்டது. ஆரம்பத்தில் அப்பகுதி வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குள் அடங்கும் பகுதி எனக் கூறியே அப்பகுதி பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அந்த 400 ஏக்கரிலும் ஏற்கனவே நிலைகொண்டுள்ள சிவில் பாதுகாப்பு படையினரின் நிலங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை பிறருக்கு வழங்க முயற்சிக்கப்பட்டது.
இதனால் வவுனியா தெற்கு பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு அப் பகுதியானது செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியாகும். அத்துடன் அப்பகுதிகள் ஏற்கனவே 400 குடும்பங்களிற்கு பகிர்ந்தளித்த காணி அனுமதிப்பத்திரங்கள் உண்டு அந்த வகையில் குறித்த தீர்மாணத்தினை மீளாய்வு செய்யுமாறு கோரப்பட்டது. அது தொடர்பில் ஆராய்வதாக பதிலளித்திருந்தார். இதே நேரம் செட்ணிகுளம் பிரதேச செயலாளரின் கவணத்திற்கும் குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து அப்புதி தொடர்பான தீர்வு எட்டப்படும் வரைநில் அங்கு எந்தவிதமான வேலைகளும் இடம்பெறாது தடுத்திருந்தார்.
இதன் பிரகாரம் மாவட்ட அரச அதிபருடன் தொடர்பு கொண்டு வவுனியா தெற்கு , செட்டிகுளம் ஆகிய இரு பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி உத்தியோகத்தர் ஆகியோருடன் அரச அதிபர் தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நானும் பங்கு கொண்டிருந்தேன். அதன் குறிப்பிட்ட 400 ஏக்கர் நிலப்பரப்பும் வீரபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிதான் எனவும் அத்தோடு அவை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதி எனவும் காணி உத்தியோகத்தரால் உறுதி செய்யப்பட்டது. அதன் பால் வவுனியா தெற்கு பிரதேச செயலாளரும் அதனை ஏற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து இரண்டாவது விடயமான குறித்த நிலங்களின் உரிமையாளர்களிடமே அப் பகுதியை கையளிக்க வேண்டும் என அரச அதிபரிடம் என்னால் போரப்பட்டதற்கும் அப் பகுதி அவர்களிற்கே உரியது என்பதற்கான ஆவணங்களை அரச அதிபர் கோரியிருந்தார். அப் பகுதியில் 400 குடும்பங்களிற்கு உரிய நிலம் உள்ள போதிலும் உடண்டியாகவே 182 பேருக்கான அனுமதிப் பத்திரங்கள் என்னால் சமர்ப்பிக்கப்பட்டது. அவையும் பரிசீலிக்கப்பட்டு உண்மை எனக் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் குறித்த 400 ஏக்கர் நிலத்தினையும் அதன் உரிமையாளர்களிடமே உடனடியாக கையளிக்க பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பார் என அரச அதிபர் உத்தரவாதம் அளித்தார்.
அதற்காக தற்போது உள்ள 350 ஏக்கரையும் உரியவர்களிடம் கையளிப்பதோடு அருகில் உள்ள 50 ஏக்கர் நிலத்தில் குடிகொண்டுள்ள சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்பில் பொலிசாருடன் தொடர்பு கொண்டு அங்கிருந்து அகற்றி அப்பகுமியினையும் மக்களிடமே வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இதன் மூலம் அப்பகுதியில் நிலவிய ஓர் பாரிய பிரச்சணை மிக அமைதியாக தீர்வு எட்டப்பட்டது. என்றார்.-

