பெசிலுக்கு எதிரான இரண்டு வழக்குள் ஒத்திவைப்பு

216 0

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்ப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ரூபாய் 36.5 மில்லியன் நிதியை செலவு செய்து ஜீ.ஐ. குழாய்களை கொள்வனவு செய்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு விநியோகத்தைமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சருக்கு மேலதிகமாக திவநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவிற்கும் எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது பிரதிவாதிகளுக்கு பிணையாளர்களை முன்னிலைப்படுத்துவதற்கு இன்று வரை காலம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வழக்கு விசாரணையின் போது அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கும் ரூபாய் 20 லட்சம் ரொக்கப் பிணையும் ரூபாய் 100 லட்சம் பெறுமதியான 3 சரீர பிணைகளிலும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வழக்கு மே மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் திவிநெகும திணைக்களத்தின் ரூபாய் 2 ஆயிரத்து 991 மில்லியன் நிதியை செலவு செய்து கூரை தகரங்களை விநியோகித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கும் இ;ன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கும் மே மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.