யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

69 0

தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று  (26.11.2023) யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் ஆதரவுடன் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வுகள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், அலங்கரிக்கப்பட்ட இடத்தில்  தேசியத் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டியதுடன் இனிப்புக்களை பரிமாறி கொண்டாடியுள்ளனர்.