முச்சக்கரவண்டி விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

106 0

முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பளையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பளை, இத்தாவில் பகுதியை சேர்ந்த குணாளன் மதுசா (வயது 19) எனும் யுவதியே நேற்று சனிக்கிழமை (25) உயிரிழந்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்கு உள்ளானதில் படுகாயமடைந்த இந்த யுவதி பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.