மாவீரர் தின நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பேராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலின்போது பொதுச் சுடரினை கரும்புலி மாவீரர்களான மேஜர் கதிரவன், லெப் கதிரவன் ஆகியோரின் சகோதரன் யோகராசாவும் ஈகைச் சுடரினை மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபுவின் தந்தை இராமையாவும் ஏற்றி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மலர் மாலையினை கரும்புலி மேஜனர் நிலாகரனின் சகோதரி புஸ்பராணியும், மாவீரர்களான தில்லையழகன், புன்னகைமாறன் ஆகியோரின் சகோதரன் குமாரும் அணிவித்தனர். தொடர்ந்து ஏனைய சுடர்களும், மலர் அஞ்சலியும் இடம்பெற்றதோடு, மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

