யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

181 0

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்று சனிக்கிழமை (25)  கைதுசெய்யப்பட்டனர்.

கடற்படையினரின் தகவலுக்கமைய சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சா பொதிகளை கொண்டு சென்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

3.5 கிலோகிராம் வரையான கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.