ஜனாதிபதியை சாடும் ஐக்கிய மக்கள் சக்தி!

83 0

நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மலினப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

இன்று எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘கீழ் தர பாராளுமன்ற நடத்தைகளை மேற்கொள்பவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பாது இருக்க வேண்டும்.

ஜனாதிபதி அடிக்கடி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்று ஏதேதோ பேசுகிறார்.

நாட்டில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லை.

தேசிய முக்கிய பிரச்சினைகள் பல உள்ள நிலையில் புதிய அறிவிப்புகளை விடுத்து நகைப்புக்குரிய வகையில் நடந்து கொள்கின்றார்.

இத்தகைய பின்னணியில் முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது.

மீயுயர் நாடாளுமன்றத்தின் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மலினப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

ஆளும் தரப்பினருக்கு கப்பம், கொள்ளை என்பவற்றுக்கு தற்போதைய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

அதன் வெளிப்பாடே அரங்கேறி வருகிறது.

நேரடி தீர்மானம் மேற்கொண்டு சிறந்த மக்கள் ஆட்சியை கொண்டு நடத்தவே சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிறது.

சஜித் பிரேமதாசவால் மாத்திரமே இது சாத்தியம்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை அதிலிருந்து மீட்பதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

அடுத்த தேர்தலை இலக்காக் கொண்டு இடதுசாரி அரசியல் கட்சிகளும் கூட்டணிக்காக எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.’