கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

134 0

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை உருவரைச் சட்டகம் (National Education Policy Framework) குறித்த அறிக்கை தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கலாநிதி வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (23) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில், பிரதமரின் செயலாளரும் தேசிய கல்விக் கொள்கை உருவரைச் சட்டகத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவைக் குழுவின் தலைவருமான அனுர திசாநாயக்க இது பற்றிய விளக்கத்தை குழுவுக்கு வழங்கினார்.

அதற்கமைய, தேசிய கல்வியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மேற்கொள்ள எதிர்பார்க்கும் பிரதான மாற்றங்களின் சாராம்சம் தொடர்பாக பல்வேறு துறைகளில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான விமலவீர திசாநாயக்க, அசங்க நவரத்ன, மஞ்சுளா திசாநாயக்க மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய வீரசுமன வீரசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் இந்த உருவரைச் சட்டகத்தை தயாரிப்பதில் தொடர்புபட்ட பங்குதாரர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், குழுவின் இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதோடு, குழுத் தலைவரின் அனுமதிக்கமைய அவர்களின் கருத்துக்களும் குழுவில் முன்வைக்கப்பட்டன.