புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது

50 0

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜேர்மன் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற தேடுதல்களில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும், ஆட்கடத்தல் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.இந்நிலையில் குறித்த கடத்தல் கும்பலில் பலர் ஈராக்கியர்கள் எனவும், அவர்கள் 208 புலம்பெயர்வோரை, பெரும்பாலும் சிரியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், புலம்பெயர்வோரை, ஹங்கேரி, ஆஸ்திரியா, செக் குடியரசு வழியாக ஜேர்மனிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்மையில் ஜேர்மனி, போலந்து, செக் குடியரசு மற்றும் சுவிட்சர்லாந்துடனான தனது எல்லைகளில் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளத் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.