வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாக வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் கொள்ளை

264 0

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமவளாக வங்கியில் இருந்து ரூ. 22 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  மருத்துவமனை வளாகத்தில் உள்ள யூனியன் பேங் ஆப் இந்தியா வங்கியில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.  வங்கியின் வென்டிலேட்டரை உடைத்த மர்மநபர்கள், லாக்கரில் இருந்த ரூ.22 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். இதையடுத்து  அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வங்கியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  இரவு நேரத்தில் ஆள்நடமாட்டம் அதிகமாக இல்லாத நேரத்தில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் நடத்திய  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.