கம்பஹாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

33 0

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா – வத்துமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவராவார்.

கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது 5 கிராம் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.