நுவரெலியாவில் மீண்டுமொரு கட்டடத்தை தனியார்துறைக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

144 0

நுவரெலியாவின் எலிசபத் மாவத்தையில் அமைந்துள்ள பழைய சீ பாங்க் ரெஸ்ட் கட்டிடம் மற்றும் காணியை அபிவிருத்தி செய்து பேணிச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான நுவரெலியாவின் எலிசபத் மாவத்தையில் அமைந்துள்ள பழைய சீ பாங்க் ரெஸ்ட் கட்டிடம் மற்றும் காணியை அபிவிருத்தி செய்து பேணிச் செல்வதற்காக தனியார் துறை முதலீட்டாளர்களிடம் போட்டி முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பேச்சுவார்த்தைக் குழுவால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த சொத்தை 50 வருடகால குத்தகை அடிப்படையில் கொலோனியல் புரொபர்டீஸ் பிரைவெட் லிமிட்டட் நிறுவனத்துக்கு வழங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.