6 ஆயிரம் சிறுவயல் நில நெல் விவசாயிகளை பயிற்றுவிப்பதற்காக விவசாயிகள் வயற் பாடசாலை !

64 0

ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமானது விவசாயத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நெல் பயிரிடும் நான்கு பிரதான மாவட்டங்களில் நெற் பயிர்ச்செய்கைக்கான நிலைபேறான அணுகுமுறையில் 6,000 சிறுவயல் நில நெல் விவசாயிகளை பயிற்றுவிப்பதற்காக விவசாயிகள் வயற் பாடசாலை நிகழ்ச்சியை அண்மையில் ஆரம்பித்துள்ளது.

பசளை, நீர், ஏனைய உள்ளீடுகள் ஆகியவற்றை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்காக நெற் செய்கையில் ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவ அணுகுமுறை தொடர்பாக விவசாய விரிவாக்க அலுவலர்களினால் அம்பாறை, பதுளை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து 6,000 விவசாயிகள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.

ஒருங்கிணைந்த தாவரப் போசணை முகாமைத்துவத்தைப் பின்பற்றல், இரசாயனப் பசளைகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்தல் ஆகியவற்றின் மூலம் சிறுவயல் நில நெல் விவசாயிகள் செலவைக் குறைக்கக் கூடியதாயிருப்பதோடுரூபவ் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க முடியும். இது சிறந்த இலாபத்திற்கு வழிகோலுவதோடு, எதிர்கால அதிர்ச்சிகளுக்;கும் நெகிழ்வுறுதியானதாகவும் காணப்படும்.

இலங்கையிலுள்ள பல நெல் விவசாயிகள் பாரம்பரிய பயிர்ச்;செய்கை முறைகளிலேயே தங்கியுள்ளனர். வழமையாகவே சம்பந்தப்பட்ட நெல் வயல்களின் மண் போசணைத் தேவைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சிபாரிசுகளை விட அதிகளவான உரங்களையே இடுகின்றனர்.

இச்சவால்களிற்கான தீர்வாக விவசாயிகள் வயற் பாடசாலை நிகழ்ச்சிகள் மண் முகாமைத்துவத்தையும் கூட்டெரு, உயிர்க்கரி என்பனவற்றின் உற்பத்தி ஆகியவற்றையும் வலியுறுத்தும் ஒருங்கிணைந்த தாவரப் போசணை முகாமைத்துவ நடைமுறைகளின் ஊடாக மண் பரிசோதனையையும் உரங்களின் வினைத்திறனானப் பாவனையையும் எளிதாக்கும். உயர் தரமான விதைகளைப் பயன்படுத்தல், முறையாக நிலத்தைப் பண்படுத்தல், விதைகளை வீசி விதைப்பதற்கான பரசூட் முறை, வினைத்திறனான நீர் முகாமைத்துவம், விளைதிறனான களை, பீடை, நோய் முகாமைத்துவம், ஒருங்கிணைந்த தாவரப் போசணை முகாமைத்துவ நடைமுறைகளின் அனைத்து முழுமையான கூறுகள் உட்பட நிறந்த பயிராக்கவியல் நடைமுறைகளை அமுல்செய்வதிலும் இந்நிகழ்ச்சி கவனஞ் செலுத்தும்.

“ரைஸ் அப்” என தலைப்பிடப்பட்டத் திட்டத்தின் ஊடாக மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் அமுல் செய்யப்பட்டு வருவதோடு, இலங்கையிலுள்ள உணவுப் பாதுகாப்பு முறையின் பாதிக்கப்படுந்தன்மையை கையாளுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 4 மில்லியன் யூரோ நிதியுதவியுடன், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உணவு விவசாய ஸ்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட புத்தாக்கமிகுந்த திட்டம் ஆகும்.

நெற் பயிர்ச்செய்கையில் சிறந்த உற்பத்தித் திறனிற்காக தரமான விதை உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமாக உரங்களை பாதுகாப்பாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவதன் ஊடாக சிறுவயல் நில விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரசாயன உரங்களில் தங்கியிருப்தைக் குறைக்கும் அதேவேளை, விளைச்சலை அதிகரிப்பதற்காக 6,000 நெல் விவசாயிகளை ஒருங்கிணைந்த தாவரப் போசணை முகாமைத்துவம் தொடர்பாக பயிற்றுவிப்பதற்குத் தேவையான திறன்கள், அறிவுடன் 289 விவசாய விரிவாக்க அலுவலர்களைப் பயிற்றுவித்த பின்னர் விவசாயிகள் வயற் பாடசாலை ஆரம்பிக்கப்படும். விவசாய விரிவாக்க அலுவலர்கள் வசதியளிப்பவர்களாகச் செயற்படுவதோடு, தமது உள்ளூர் நிலைமைகளுடன் தொடர்பான பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுடன் பணியாற்றுவர்.

விதைகளையும் உரங்களையும் பாதுகாப்பாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்தல் உள்ளடங்கலாக நிலைபேறான பயிற்செய்கை முறைகளை அமுல்செய்வதன் ஊடாக இலங்கையின் நெற் செய்கைத் துறையில் உற்பத்தித்திறன், உணவுப் பாதுகாப்புரூபவ் வாழ்வாதாரம் ஆகியவற்றை தூண்டுவதை “ரைஸ் அப் (RiceUP );” இலக்காகக் கொண்டுள்ளது.

இலங்கையின் விவசாயத் துறையின் நீண்டகால நிலைபேறான தன்மையையும் நெகிழ்வுறுதியையும் உறுதி செய்வதற்காக உணவு விவசாய ஸ்தாபனமானது, தனது பங்காளிகளுடன் இணைந்து தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும்.