அதிகம் கொடுப்பனவு செலுத்தப்பட்ட சர்வதேச காற்பந்து வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது.

255 0

2016-17ஆம் ஆண்டுகளில் அதிகம் கொடுப்பனவு செலுத்தப்பட்ட சர்வதேச காற்பந்து வீரர்களின் பட்டியலை ‘ஃப்ரான்ஸ் ஃபுட்போல்’சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

இதன்படி முதலாம் இடத்தில் போர்த்துகல் மற்றும் ரியல் மெட்ரிட் கழகம் என்பவற்றின் வீரர் க்றிஸ்ரியானோ ரொனால்டோ உள்ளார்.

அவருக்கு 87.5 மில்லியன் யூரோ கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ஜெந்தீனா மற்றும் பார்சிலோனா வீரர் லியோனெல் மெசி 76.5 மில்லியன் யூரோ கொடுப்பனவுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மூன்றாம் இடத்தில் ப்ரேசில் மற்றும் பார்சிலோனா வீரர் நெய்மர் உள்ளதுடன், அவருக்கு 55.5 மில்லியன் யூரோ கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது.

கரேத் பெலே, ஈஸ்குயெல் லவாசி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.