நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை- நெல் விநியோக சபை(காணொளி)

352 0

 

பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை என நெல் விநியோக சபை தெரிவித்துள்ளது.

சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தனியார் துறை வர்த்தகர்கள் நெல்லுக்கு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நெல் விநியோக சபை எந்த சந்தர்ப்பத்திலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு தயாராக இருப்பதாக நெல் விநியோக சபை தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.