இலங்கையின் தென்கிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

38 0

இலங்கையின் தென்கிழக்கு கடற் பகுதியில் இன்று (14) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

6.1 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக கூறப்படுகிறது.

கொழும்பில் இருந்து 1,326 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு ஆபத்து ஏதும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.