மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய செயல்திறன் மிக்க தலைமைகள் இல்லை

356 0
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய செயல்திறன் மிக்க தலைமைகள் இல்லை  முன்னாள் எம்பி சந்திரகுமார்.
தமிழ் மக்கள் நாளாந்தம் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். ஆனால் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நல்ல செயல்திறன்மிக்க தலைமைகள் இல்லை  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கள் கிழமை கிளிநொச்சி பன்னங்கண்டியில் ஆறாவது நாளாக காணி உரிமம் கோரி  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
பன்னங்கண்டியில் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களின் கோரிக்கை நியாயமனது அவர்கள் 1990 ஆம் ஆண்டு முதல் இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை கொண்டு வேறு இடங்களில் குடியமர்த்த முடியாது. இந்த மக்கள் இந்த பிரதேசத்தில் நீண்டகாலமாக வாழ்நது பழக்கப்பட்டவர்கள்  இந்த நிலங்களை வளமிக்கதாக மாற்றியவர்கள் எனவே பன்னங்கண்டி  மக்கள் காணி உரிமையுடன் இந்தப் பிரதேசத்திலேயே வாழவேண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.ஆனால் அதிகாரத்தில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் அதனை மேற்கொள்வதாக தெரியவில்லை. கடந்த காலத்தில் நாங்கள் சிவபுரம்இ நாதன் திட்டம்இ உழவனூர் போன்ற கிராமங்களில் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கின்றோம். இன்று அந்தப் பிரதேசங்களில் மக்களுக்கு வீட்டுத்திட்டமும் கிடைக்கப்பெற்று அவர்களின் வாழ்க்கை முறையும் மாற்றம் கண்டுள்ளது. எனத் தெரிவித்த அவர்
அவ்வாறு பன்னங்கண்டி மக்களின் மக்களின் பிரச்சினையும் தீர்த்துவைக்கப்பட வேண்டும்இ அதற்கான முயற்சியை எல்லோரும் மேற்கொள்ள வேண்டும. எனவும் குறிப்பிட்டார்.