வடக்கில் கிராமசேவகர்கள் வெற்றிடத்திற்கு பரீட்சை எழுதியவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்- சாள்ஸ் எம் பி

266 0
வடக்கில் காணப்படும் கிராம சேவகர்கள் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற கிராம சேவகர்களிற்கு மீள் நியமனம் வழங்க எடுக்கும் முயற்சியினைக் கைவிட்டு பரீட்சை எழுதிவிட்டுக் காத்திருக்கும் புதியவர்களிற்கு நியமனத்தை வளங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வட மாகாணத்தின்  917 கிராம சேவகர் பிரிவுகளில்ல தற்போது  671 கிராம சேவகர்கள் மட்டுமே  பணியாற்றும் நிலையில்  246 கிராமசேவையாளர்களுக்கான இடங்கள் வெற்றிடமாகவுள்ளமை அரசாங்க அதிபர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 வீதமான பிரிவுகளிலும் யாழ்ப்பாணத்தில்ல 20 வீதமான பிரிவுகளிலும் கிலாமசேவகர்கள் இல்லாத தன்மையே கானப்படுகின்றது.
இவ்வாறு அதிக கிராம சேவகர் பிரிவுகளில் பணி புரிவதற்கு உத்தியோகத்தர்கள்   அற்ற நிலமையில் குறித்த விடயத்தினை   கடந்த வாரம் வவுனியா  மாவட்டச் செயலகங்களின் தகவல்களில்  சுட்டிக்காட்டப்படுகின்றது.
 இந்த வகையில் யாழ்ப்பாண
மாவட்டத்தினில்நடவடிக்கை கிராம சேவகர்களிற்கான வெற்றிடங்கள் நிலவுகின்றது. அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில்  51 கிராம சேவகர்களிற்கான  வெற்றிடம் நிலவுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் 20 கிராம சேவகர்களிற்கான  வெற்றிடம் காணப்படுகின்றது. அதேபோன்று வவுனியாவில் 40 கிராம சேவகர்களிற்கான வெற்றிடம் உள்ளதோடு  மன்னார் மாவட்டத்தினில் 32 வெற்றிடமாக வடக்கினில் மட்டும் 246 கிராம சேவகர்களிற்கான வெற்றிடம் கானப்படுமல அதேவேளை இப் பதவிக்காக விண்ணப்பித்து பரீட்சையும் எழுதி ஆயிரக்கணக்கானோர் இந்த வேலை கிடைக்கும் என நம்பி காத்திருக்கின்றனர்
இருப்பினும் கடந்த வாரம் வவுனியா வந்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் இங்கு அதிக கிராம சேவகர் வெற்றிடங்கள் கானப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டது. இவ்வாறு கானப்படும் வெற்றிடத்திற்கு போட்டிப் பரீட்சை எழுதியவர்களிற்கு நியமனத்தை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்த வேளையில் அரச அதிபர்களின் ஊடாக ஓய்வு பெற்ற கிராம சேவகர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடி கையானது வேலை வாய்ப்பினை நம்பிக் காத்திருக்கும் எமது இளைஞர்களை மேலும் விரக்தி நிலைக்குத் தள்ளும் செயல்பாடாகவே அமையும் எனவே  வடக்கின் 5 மாவட்டத்திலும் கானப்படும்   கிராம சேவகர் வெற்றிடங்களிற்காக கிராம உத்தியோகத்தருக்கான போட்டிப் பரீட்சை எழுதி காத்திருக்கும் புதியவர்களிற்கே அந்த நியமனத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடப்படுகின்றது. என்றார்