அரசாங்கத்திற்கு எதிராக வலுவான பௌத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி அபயாராமயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
தனித் தனியாக செயற்பட்டு வரும் தேசிய சிங்கள பௌத்த அமைப்புக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வலுவான பௌத்த அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.இந்த பௌத்த அமைப்பு பத்து பதினைந்து பௌத்த அமைப்புக்களின் ஒன்றியமாக செயற்படும்.பண்டிகைக் காலத்தின் பின்னர் இந்த அமைப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.
மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.ஐயாயிரம் பௌத்த பிக்குகளை ஒரு இடத்திற்கு அழைத்து பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.தற்போதைய அரசாங்கம் நாட்டின் வளங்களை தனியாருக்கு விற்பனை செய்தல், புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் வேட்டையாடுதல், நாட்டுக்கு எதிரான அரசியல் அமைப்பு போன்றவற்றுக்கு எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

