சவூதியில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடலை அங்கேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் அனுமதி

356 0

125121649deadசவூதி அரேபியாவில் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட இலங்கையரின் உடலை அங்கேயே அடக்கம் செய்ய குடும்பத்தினரின் அனுமதி அளித்துள்ளனர்.
இலங்கை வெளியுறவு அமைச்சின் ஆலோசனைப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கெக்கிராவையை சேர்ந்த 32 வயதான இந்த இலங்கையர் சில நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து இதுவரையில் காவல்துறை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.
எனவே தகவல்கள் எதனையும் வெளியிடமுடியவில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் அரப் நியூஸ் செய்தியின்படி கொல்லப்பட்டவர் பணியாற்றிய யன்பு என்ற பிரதேசத்தின் காவல்துறையினர் யேமனியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.