றைகம தோட்டத்தில் தீபாவளி கொண்டாடிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!

93 0

தீபாவளி பண்டிகை முன்னிட்டு களுத்துறை மாவட்டத்தில் உள்ள  றைகம  பெருந்தோட்ட மக்கள்  மீது பெரும்பான்மையின இளைஞர்கள் இன ரீதியாக தொடர் தாக்குதல்  நடத்தி வந்த நிலையில், இவர்களின் தொடர் அச்சுறுத்தலுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தலையீட்டால் இப்பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வந்ததது.

இந்நிலையில், பெரும்பான்மை இனத்தவரின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், றைகம தோட்டத்திற்கு இன்று விஜயம் செய்த செந்தில் தொண்டமான், கேக் வெட்டி, பாட்டசு வெடித்து றைகம தோட்ட மக்களுடன் இணைந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார்.

மேலும் அம்மக்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, செந்தில் தொண்டமான் உத்தரவிட்டார்.

தேர்தல் காலத்தில் மாத்திரம் அரசியல் தலைமைகள் எமது தோட்டத்திற்கு விஜயம் மேற்கொல்லும் நிலையில், எமக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் எங்களுடன் இணைந்து அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று தந்தது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மாத்திரமே என்று அத்தோட்ட மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.