அலவத்துகொடையில் மண் மேடு சரிந்ததில் வர்த்தகக் கட்டிடம் சேதம்

208 0

கண்டி – மாத்தளை வீதியில் அலவத்துகொடை, பலகடுவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  (12) இடம்பெற்ற மண்சரிவினால் வர்த்தக கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது.

குறித்த அனர்தத்தின் போது கட்டிடத்தில் எவரும் இருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.