120 இலங்கை கலைஞர்களுக்கு சமாதான நீதவான் பதவி

87 0

சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்தின் கீழ் இலங்கை கலைஞர்களுக்கு சமாதான நீதவான் பதவியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, உள்ளூர் கலையின் முன்னேற்றத்திற்கு தமது திறமைகளையும் படைப்பாற்றலையும் வழங்கிய 120 கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சமாதான நீதவான் நியமனங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இன்று நீதி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.நாடளாவிய ரீதியில் சினிமா, மேடை, தொலைக்காட்சி, டெலி நாடகம், இசை, பாடல், பாடலாசிரியர் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் மூத்த கலைஞர்களுக்கு சமாதான நீதவான் என்ற பதவி வழங்கப்பட்டது.