விடுதிப் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

141 0

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகள் தொடர்பான தங்களது பிரச்சினைகளை  தீர்க்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சப்ரகமுல மருத்துவ பீடத்தை வெகுவிரைவில் அங்குரரப்பணம் செய்தல் உள்ளடங்கலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து சுகாதார அமைச்சு வரை பேரணியாக செல்லும் வகையில் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் இப்போராட்டத்தில் மருத்துவ பீட மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தப்பட்டதுடன் 21 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று வியாழக்கிழமை (9) கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.