முன்பள்ளி ஆசிரியர்களின் சேவை மகத்தானது – டெனிஸ்வரன்

214 0

மன்னார் வலய முன்பள்ளி ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய 2017 சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டெனிஸ்வரன் முன்பள்ளி ஆசிரியர்களின் சேவை மகத்தானது என்றும் தெரிவித்ததோடு, இவ்வாறான ஓர் நிகழ்வை ஏற்பாடு செய்த மன்னார் வலய முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினரை தாம் பாராட்டுவதாகவும், குறிப்பாக சிறார்களை ஆரம்ப பள்ளிதனில் உருவாக்கும் அதாவது ஆரம்ப கல்வியை சரியான முறையில் ஊட்டி அவர்களை இந்த கல்வி உலகிற்கு அடியெடுத்துவைக்க உறுதுணையாய் நிற்பவர்கள் இந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களே.

அந்தவகையில் இவ்வாறான ஓர் நல்ல ஆரம்பத்தை ஆரம்பித்துவைக்கும் ஆசிரியர்களையும் அவர்களது சேவையையும் நிச்சயமாக இந்த மகளிர் தினத்தில் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

குறிப்பாக இவர்களது மாதாந்த சம்பளம் ரூபாய் 4000 ஆக இருப்பதனால் தற்போதைய பொருளாதார நிலையில் ஒரு சிறு பிரச்சினையை கூட சீர்செய்யமுடியாத ஓர் நிலையில் இருப்பதை தாம் உணர்ந்துள்ளதாகவும், அந்தவகையில் அவர்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக கல்வி அமைச்சருடன் தாம் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்ததோடு தனது இந்த ஆண்டிற்க்கான ஒதுக்கீட்டில் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்கித்தருவதாகவும் அதன் ஊடாக தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யுமாறும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.