நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பாக்க தீர்மானம்

208 0

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை புதிய முதலீட்டுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தபால் ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை 8 ஆம் திகதியும் நாளை மறுதினம் ,9 ஆம் திகதியும்,10 ஆம் திகதியும் தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யபட்டுள்ளதாகவும் சகலரும் சேவைக்கு சமுகளிக்க வேண்டுமெனவும் தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகத்தை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.