எம்.ஓ.பி. ரக உரத்தின் விலையை குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

62 0

மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MoP) உரத்தின் விலையை மேலும் 50 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்லவிலள்ள ஒமர கிராமத்தை இரண்டாம் கட்ட விவசாய வணிக கிராமமாக அபிவிருத்தி செய்யும் பணியை நேற்று (05) ஆரம்பித்து  வைத்த அவர், அமைச்சரவை  பத்திரத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது 28,600 மெட்ரிக் தொன் மியூரேட் ஆஃப் பொட்டாஷ்  உரம் கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர்  தெரிவித்தார்.

இந்நிலையில், மியூரேட் ஆஃப் பொட்டாஷ்  உரத்தின் விலையை 50 வீதத்தால் குறைக்க முடியும் எனஅரசுக்கு சொந்தமான உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.