ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு : -சிற்றுண்டி,ஹோட்டல் உரிமையாளர் சங்கம்

190 0

எரிவாயு சிலிண்டரின் விலையேற்றத்துக்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தேநீர்,பால்மா,உணவு பொதி,கொத்து,ப்ற்ரைஸ் ஆகியனவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அகில இலங்கை சிற்றுண்டி  மற்றும் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹர்ஸன ருக்ஷான் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தின் தீர்மானத்தினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.

உணவு பொருட்கள்,மின்கட்டண அதிகரிப்புக்கு மத்தியில் ஹோட்டல் உணவு பொருட்களின் விலைகளை தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

சீனி விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.ஆகவே தேநீர் ஒரு கோப்பையின் விலையை 05 ரூபாவினாலும்,பால் தேநீர் ஒரு கோப்பையின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

அத்துடன் எரிபொருள் விலை அதிகரிக்கப்புக்கமைய உணவு பொதியின் விலையை 20 ரூபாவினாலும்,கொத்து,பொரித்த சோறு (ப்ற்ரைஸ்) விலையை 20 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.