களுத்துறை வடக்கு பிரதேசத்தில் நண்பனை பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றத்தின் பேரில் சக நண்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு – கந்தபன்சல பகுதியை சேர்ந்த 67 வயதுடைய நபர் ஆவார்.
இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது நண்பர்கள் இருவரும் இணைந்து மது அருந்திக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் தனது கள்ளத்தொடர்பு குறித்து சக நண்பனிடம் வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் அந்த உறவை நிறுத்திவிடுமாறு சக நண்பன் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கள்ளத்தொடர்பை பேணிவந்த நண்பன் அறிவுரை கூறிய தனது சக நண்பனை தாக்கியுள்ளார்.
தன்னை அடித்ததற்காக கோபமடைந்த சக நண்பன் கள்ளத்தொடர்பை பேணிவந்த நண்பனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

