அம்புலன்ஸை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி

126 0
image

காசாவில் கடுமையான காயங்களிற்குள்ளானவர்களுடன் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.

அம்புலன்ஸில் கடுமையான காயங்களுக்குள்ளான 15 முதல் 20 நோயாளிகள் காணப்பட்டனர் -காசாவிற்கு வெளியே சிகிச்சைக்காக  அல்ஸிபா மருத்துவமனையிலிருந்து எகிப்திற்கு ரபா எல்லை வழியாக அவர்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என காசாவின் சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.