காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தூய்மையான கரங்களுடன் வந்தால் அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பதிலளிக்கும். இல்லையெனில் நியாயமற்ற விடயத்திற்கு இலங்கை பதிலளிக்க வேண்டுமா?” என, வெலிமடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

