மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

422 0

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

பார்படோஸில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வழங்கியது.

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த பாகிஸ்தான் அணி, 17.1 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்த வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணியில் நேற்றைய தினம் அறிமுகம் பெற்ற சதான் கான் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றியதுடன் போட்டியில் சிறப்பாட்டகாரராகவும் தெரிவானார்.

இதன்படி, நான்கு போட்டிகளை கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.