ரஷ்யாவின் பிரதான எதிர்கட்சித் தலைவர் கைது

240 0

ரஷ்யாவின் பிரதான எதிர்கட்சித் தலைவர் அலெக்ஷி நவலனி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஊழலுக்கு எதிராக ரஷ்யாவின் மொஸ்கோவில் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரக்கணக்கானவர்கள், பங்குகொண்ட இந்த போராட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபூர்வ அனுமதிகள் பெறப்படாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.