இலங்கை வரும் கப்பல்களை பாதுகாக்க வேலைத்திட்டம்

334 0

இலங்கைக்கு வரும் கப்பல்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை இந்திய நாடுகள் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளது.

இந்த தகவல்களை இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்திய கடற்படையின் கப்பல் ஒன்று இலங்கை கடற்படையினருடன் இணைந்து ஆய்வுகளை நடத்தவுள்ளது.

இதன்போது இரண்டு தரப்பும் இணைந்து புதிய கடல்பிராந்திய பாதுகாப்பு குறித்த தரவுகளை சேகரிக்க உள்ளன.

இலங்கைக்கு வரும் கப்பல்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆய்வின்போது இலங்கையின் கடற்படையினருக்கு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.