சவூதியில் இலங்கையர்கள் சிலர் காணாமல் போயுள்ளனர்

323 0
இலங்கையர்கள் சிலர் சவூதிஅரேபியாவில் பணிசெய்த நிலையில் காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று, ரத்னபுரி, கிரியுல்ல, அத்திமலை, கல்லடி மற்றும் கலன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் அவர்கள் சவூதிக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமது பணியகத்துக்கு அறிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.