ஐ.நாவில் மே 17 இயக்கம் பதிவு செய்ததை விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

401 0

ஐ.நா மனித உரிமை அவையில் தமிழருக்கு மறுக்கப்பட்ட நீதியும், பின்னணியும் குறித்தும், தமிழக பிரச்சினைகள் குறித்து ஐ.நாவில் மே பதினேழு பதிவு செய்ததை விளக்கியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 25-3-2017 சென்னை நிருபர்கள் சங்கத்தில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன், பிரவீன்குமார் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

விரிவான பத்திரிக்கை அறிக்கை:

குற்றம்புரிந்தவரே தனது குற்றத்தை விசாரிக்கும் முறை அப்பட்டமான மனித உரிமை மீறல்

தமிழர் பிரச்சனைக்கு பேசுவதாகக் கூறி, அமெரிக்கா, இந்தியா,இங்கிலாந்து நாடுகள் தங்கள் சுயநலனை முன்னெடுத்திருக்கின்றன.

மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் முன்வைத்த விவாதங்கள்:

ஐநாவின் சித்திரவதை கண்காணிப்பு நிபுணர் ‘ இலங்கையில் சித்திரவதைகள் மைத்ரிபாலா ஆட்சி வந்த பின்னரும் தொடர்கிறது. பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன என்று பதிவு செய்திருக்கிறார். மேலும் அவரிடம் “இலங்கை ராணுவத்தினால் பாலியல் அடிமையைப்போல மூன்று வருடங்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட தகவலை நேரடியாக பாதிக்கப்பட்ட பெண் பகிர்ந்திருக்கிறார்”.

மனித உரிமைக்கமிசனர் தன்னுடைய அறிக்கையில் “ வெள்ளைவேன் கடத்தல் இருப்பதாக’ பதிவு செய்திருக்கிறார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜாவினை கொலை செய்தவர்கள் சிங்கள நீதிபதிகளால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.. பிணக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் ஆதாரங்களைப் பாதுகாக்கும் தன்மையை இலங்கை அரசு வளர்த்துக்கொள்ளாமல் இருக்கிறது என்று அறிக்கை கூறுவதில் இருந்து இனப்படுகொலை ஆதாரங்கள் இனிவரும் 2 வருடங்களில் நீக்கப்படுவதற்கோ, மறைக்கப்படுவதற்கோ, சிதைக்கப்படுவதற்காகவோ வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இயலுகிறது.

மிக முக்கியமான குற்றவழக்குகளில் எந்தவித முன்னேற்றத்தையும் இலங்கை அரசு காட்டவில்லை என்பதுமட்டுமல்ல அதை செய்வதற்கு விருப்பமும் காட்டவில்லை. காவல்துறை, ராணுவம் செய்த குற்றங்களை பாதுகாப்பதாகவே இது அமைகிறது.

இலங்கையின் பிரதமர், சனாதிபதி, மற்றும் நீதித்துறை அமைச்சர் வெளிப்படையாக இனப்படுகொலையாளர்கள் , போர்க்குற்றவாளிகள், மீது நடவெடிக்கை எடுக்கமாட்டோம் என்று பதிவு செய்திருப்பதையும் ஐ.நா மனித உரிமைக்கமிசர் அறிக்கை சொல்லுகிறது. பயங்கரவாத தடுப்புச்சட்டம், ராணுவமயமாக்கல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படாமை, சித்திரவதை முகாம்கள் என இலங்கையின் பயங்கரவாத கட்டமைப்புகள் முழுதுமாக நிலவுவது அறிக்கையில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இப்படியான செய்திகள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களாகவும், சாட்சியங்களாகவும் இருக்கும் பொழுதில் கூட இலங்கை அரசின் மீது விசாரணை நடத்த சர்வதேச அளவில் எந்த நாடும் முன்வர மறுக்கிறது, இலங்கையின் நீதித்துறை ஒருபக்கச் சார்புடனும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக இயங்குவதை பதிவு செய்திருந்த பொழுதிலும் சர்வதேச சுதந்திர விசாரனைக்கு உத்திரவிடாமல் தவிர்க்கிறது சர்வதேசம், மாறாக மனித உரிமைக்கமிசனர், கலப்பு விசாரனை தேவை என்று பதிவு செய்கிறார். இந்த நீர்த்துப் போன விசாரணைமுறையைக் கூட இலங்கை அரசு வெளிப்படையாக மறுத்து வருவதை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்களை அறிக்கைகள், பதிவுகளிலிருந்து சுட்டிக்காட்டி மே17 இயக்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் குறிப்பாக, “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை அனைத்து தேசியங்களுக்குமான அடிப்படை மனித உரிமை என ஐ.நா மனித உரிமை சாசனம் பதிவு செய்திருக்கிறது, இவ்வாறு சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதன் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யமுடியும் என்று மே17 இயக்கம் பதிவு செய்தது.

மேலும் இந்த பாதுகாப்பு இருந்தால் மட்டுமே நேர்மையான சர்வதேச விசாரணை நடத்த இயலும் என்றும் பதிவு செய்தது. மேலும், இந்த பிரிந்து போகும் உரிமையின் மூலம் இனப்படுகொலையிலிருந்து மக்களை மீட்ட கிழக்கு திமோர், போஸ்னியா போன்ற நாடுகள் தமிழ் ஈழத்தை பாதுகாக்க முன்வரவேண்டுமென்று மே17 இயக்கம் பதிவு செய்தது.

ஹைத்தி நாட்டில் சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதால் வெளியேற்றப்பட்ட இலங்கை ராணுவம் தமிழகத்திலும் மீனவரை படுகொலை செய்திருக்கிறது. ஆக இலங்கை அரசு ஒரு பயங்க்ரவாத ராணுவத்தை வளர்த்திருக்கிறது எனவே சர்வதேசவிசாரணை உடனே தேவை என்பதை மே 17 இயக்கம் பதிவு செய்திருக்கிறது. மேலும் ஈழத்தமிழருக்கான பிரிந்து போகும் உரிமையை மறுப்பது அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும்.இதே சமயத்தில் உலகம் முழுவதும் இலங்கை தனது போர்க்குற்ற்வாளி ராணுவ தளபதிகளை அனுப்பி தமிழர்களை மிரட்ட பயன்படுத்தி வருகிறது. அதே போன்று ஐ.நா மனித உரிமை அவைக்கும் போர்க்குற்றவாளிகளை அனுப்பி வைத்து தமிழர்களின் சாட்சியங்கள், சிவில் உரிமை இயக்கத்தவரை மிரட்டுகிறது.

மேலும் தமிழர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் தங்களது பிராந்திய நலனை முன்னெடுத்தன. இந்த நாடுகள் இலங்கை அரசோடு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டிருப்பது மிகவும் அவமானகரமானதாகும். இவை தமிழர் பிரச்சனையை தனது சுயநலத்திற்கு பயன்படுத்திகொண்டிருக்கின்றன. இது போன்ற மனித அவலத்தை தடுத்து நிறுத்தி நிதியை பெற்றுத்தர உறுப்பு நாடுகள் முன்வருவதே நேர்மையான நீதிமுறையாகும்.

இலங்கை அரசு ரோம் பிரகடனத்தில் கைசாத்திடுவதை வலியுறுத்திய எஸ்டோனியா நாட்டிற்கு நன்றி தெரிவிக்கிறோம், ஏனெனில் இப்பிரகடனத்தில் கையெழுத்திட்டால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க இயலும்,

——————————————————————————–

தமிழகத்தின் பிரச்சனையை முதன்முதலாக பதிவு செய்தது மே17 இயக்கம்:

2016 ஜூன் மாதம் தமிழகத்தின் பிரச்சனைகளாக ஆந்திராவில் தாக்கப்படும் தமிழக உழைப்பாளிகள், ஈழ அகதிகள் என்று பதிவு செய்த மே17 இயக்கம், அதன் தொடர்ச்சியாக தற்பொழுது விரிவாக காவேரி நீர் உரிமை பிரச்சனை, கர்நாடக-பெங்களூர் கலவரம், ஆந்திராவில் தமிழக உழைப்பாளர்கள் சித்திரவதைக்குள்ளாவது, கொலைசெய்த அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது, மற்றூம் தமிழக மீனவர் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல் பற்றி விரிவாக மே17 இயக்கம் பதிவு செய்திருக்கிறது. இதில் நீர் உரிமைக்கான ஐநா சாசனத்தை எடுத்துக்கூறி காவேரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக செய்துவரும் அட்டூழியங்களை மே17 இயக்கம் உறுப்பு நாடுகள் முன்னிலையில் பதிவு செய்திருக்கிறது.
ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழகம் சார்ந்த அறிக்கை:
வணக்கம்.

நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். இந்தியாவின் ஒரு மாநிலமாக 8 கோடி தமிழர்களை கொண்டது. இந்தியர்களான 600 தமிழ் மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையின் கொடூரமான தாக்குதல்களில் உயிர் இழந்துள்ளனர். சமீபத்தில் , சென்ற வாரம் 22 வயது இளைஞர் பிரிட்ஜோ எனும் தமிழகத்தை சேர்ந்த மீனவர் கழுத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் மற்றூமொருவர் கடுமையாக காயமைடைந்துள்ளார். கண்மூடித்தனமான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் பேரிழப்பை தந்துள்ளன. 2011 ஜனவரியில் அடுத்தடுத்த வாரங்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை கடற்படையை சார்ந்த ஒரு அதிகாரி படகினுள் ஏறி, தமிழக மீனவர் திரு.ஜெயகுமார் அவர்களது கழுத்தை சுற்றி கயிரால் இறுக்கி உள்ளார். அதன் பின், அவ்வாறே கடற்படை கப்பல் மூலம் கடலில் மூழ்கடிக்கப்பட்டவாறே இழுத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். 2011 ஏப்ரலில் 4 மீனவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஒருவர் தலை துண்டிக்கப்பட்டும் மற்றொருவர் உயிருடன் புத்தக்கப்பட்டும் கொல்லப்பட்டனர். 167 சம்பவங்களில் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு அதில் 85 மீனவர்கள் உயிர் இழந்துள்ளதாகவும் 185 மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இந்திய அரசே உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையும், கொடூர இலங்கை அரசுடனான கூட்டும் தமிழ் மீனவர்களை வெகுவாக பாதித்தும் அவர்களது வாழ்வாதாரத்தை அழித்தும் உள்ளது. இலங்கை அரசை பாதுகாத்தும், ஊக்கப்படுத்தியும் வந்ததன் மூலம் ஈழ தமிழர் மீதான இனப்படுகொலை மட்டுமின்றி இந்திய நாட்டை சார்ந்த 600 தமிழ் மீனவர்களின் கொலைக்கும் இந்திய அரசு காரணமாகி உள்ளது.

தமிழர் விரோத பேரினவாத சிங்கள அரசு தொடர்ச்சியாக இந்தியர்களாக உள்ள தமிழ் மீனவர்களை தாக்குதல் நடத்தி கொன்று வருகிறது. மற்றொரு நாட்டின் குடிமக்கள் என்பதையும் மதிக்காது அதனையும் மீறி, இவை தமிழருக்கு எதிராக சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதம் ஆகும்.

இந்தியாவின் அந்திர மாநிலத்தில் தமிழக தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் நீதிக்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட 20 தமிழர்கள் பற்றியும் ஜூன் 2016யில் நாங்கள் அறிக்கையில் பதிவு செய்தோம். 20 தமிழர்கள் கொல்லப்பட்டதன் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் என்று யார் மீதும் புகார் பதிவு செய்யப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக கோயிலுக்கு சென்ற பக்தர்கள் உட்பட 1000 தொழிலாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீடியோவில் காண்பிக்கப்பட்டது போல கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவத்தில் 179 தொழிலாளர்கள் கொடுமை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் படி 2016 செப்டம்பரில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மற்றொரு மாநிலமான கர்நாடத்திற்கு உத்தரவிட்டது. இதன் விளைவாக பெங்களூருவில், கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. தமிழர்களுடைய கடைகளும் மற்ற சொத்துக்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. காவேரி நீரை வழங்காமல் மறூப்பது ஐநாவின் சர்வதேச விதிமுறையான ‘தண்ணீர் மறூப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவது’. இந்த உரிமையை ஐ.நாவின் பொதுச்சபையின் விதி 64/292 உறுதி செய்கிறது.ஆனால் இந்த விதிமூறைகளை மீறி கர்நாடக அரசு தமிழர்களுக்கான தண்ணீரை மறுத்திருக்கிறது. இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும் இவ்வாறு மறுப்பது மனித உரிமை மீறும் செயல்.

பள்ளி மற்றும் அலுவலகங்கள் செல்லும் வழியில் தமிழர்கள் பொது இடங்களில் தாக்கப்பட்டனர். சில தமிழர்கள் பொது மக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டும் துன்புறுத்தப்பட்டனர். தமிழர்கள் தாக்கப்பட்டது, தாக்கியவர்களின் வெற்றி களிப்பில் வீடியோ பதிவுகளாக வெளிவந்தன. கர்நாடக அரசும் இந்திய அரசும் வன்முறையை தடுக்க ஏதும் செய்யவில்லை, தக்கியவர்களையும் கைது செய்யவில்லை. இனவாத திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகள், அவர்களை இந்தியாவில் உள்ளேயே தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த ஊக்குவிக்கிறது.

ஜனநாயக முறையில் அமைந்த தமிழக சட்டமன்றத்தில் 2013 ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில் இலங்கையை நட்பு நாடாக கொள்ள கூடாது என்றும் ஈழ தமிழர்களுகிடையே சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் புதுதில்லியை (மத்திய அரசை) தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

பத்திரிகையாளர் சந்திப்பு காணொளி

தமிழக பிரச்சனைகளை ஐநாவில் பதிவு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் பக்க அரங்கில் ”ஆக்கிரமிப்பில் தேசங்கள்” (தமிழ் ஈழம், பாலஸ்தீன், குர்திஸ்தான், வெஸ்டர்ன் சகாரா, தெற்கு ஏமன், திபெத்…..) எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் ஆற்றிய உரை

நீதியைப் பெறுவதற்காக தமிழர்கள் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றத்தை விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
– ஐ.நா வில் மே பதினேழு இயக்கம் உரை

ஈழத் தமிழ் தேசத்தை உருவாக்குவது ஒன்றே இலங்கைத் தீவில் காலனியாதிக்கத்தை நீக்கும் ஒரே வழி.
– ஐ.நா வில் மே பதினேழு இயக்கம் உரை

பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்படும் மீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய மன்றத்தில் மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது. இசுரேலின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த சர்வதேசத்திற்கு கோரிக்கை வைத்தும், இசுரேல் தொடர்ந்து சர்வதேச சட்டங்களை மீறி பாலஸ்தீனியர்களை தாக்கி வருவதையும், நிலத்தை ஆக்கிரமித்து வருவதையும் பதிவு செய்தது. ஐ.நாவில் நிறைவேற்றப்படட தீர்மானங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட்து. பாலஸ்தீனியத்தில் நடக்கும் இனஅழிப்பு கொடுமைகள் ஈழத்தில் இலங்கை அரசால் நடத்தப்படுவதையும் இதனாலேயே தமிழர்கள் அடக்கப்படுவதையும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தருவதையும் பதிவு செய்தது.