தேசிய அடையாள அட்டை கட்டணம் அதிகரிப்பு

267 0

தேசிய அடையாள அட்டை (NIC) கட்டணத்தை அதிகரிக்க  அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 1,000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் இணைய முறையில் சமர்பித்தால்  25 ரூபாயாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையாளர் நாயகத்துக்கு  ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் 500 ரூபாயாகவும் இருக்கும்.

மேலும், பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான 10,000 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கட்டணமான 2,000 ரூபாயை 3,000 ரூபாயாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் பதிவு செயல்முறையை எளிதாக்குவதையும் பொதுமக்களுக்கான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அறிவிப்பு கூறுகிறது.

புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை www.documents.gov.lk என்ற இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பார்க்கலாம்.