யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் அச்சமின்றி தமது கற்றல் செறப்படுகளை மேற்கொள்ள முடியும் என்று யாழ்.வருகைதந்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டிசில்வா தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த 16 ஆம் திகதி தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இம் மோதல் சம்பவத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக கற்கைநெறிகள் தற்போது பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இங்குள்ள நிலமை தொடர்பாக ஆராய்வதற்கு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டிசில்வா தலமையிலான 5 ஆணையாளர்களைக் கொண்ட குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திற்க வருகைதந்திருந்தனர்.
இங்க வந்தவர் அவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாராய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும் அவர்கள் நடாத்தியிருந்தனர்.
மேற்படி ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- சிறந்த முறையில் யாழ்.பல்கலைக்கழகம் இதுவரையில் இயங்கி வந்திருந்தது. இருப்பினும் அண்மையில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலினால் இங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இருப்பினும் அம் மோதல் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் நிலவிய அமைதியின்மை முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 7 பீடங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுடுள்ளது இதில் 100 வீதமான மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி கற்று வருகின்றார்கள்.
இன்னும் சில நாட்களில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் முகாமைத்துவ பீடங்களும் ஆரம்பிக்கப்பட்டுவிடும் என்றார்.
- Home
- முக்கிய செய்திகள்
- யாழ்.பல்கலைக்கழகத்தில் நிலவிய அச்ச நிலமை தவிர்க்கப்பட்டள்ளது பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொகான் டிசில்வா
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

