இந்தியாவின் கரிசனையையும் மீறி வடக்குகிழக்கில் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்கின்றன

155 0

இந்தியா இலங்கை அதிகாரிகளிடம்  கரிசனை வெளியிட்டுள்ள போதிலும் இலங்கையின் வடகிழக்கில் குறிப்பாக மீன்பிடித்துறையை மையமாக கொண்டு சீனாவின் நடவடிக்கைகள்  தொடர்கின்றன.

இலங்கைக்கான சீன தூதுவர் 2021 இல் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்தியா குறிப்பாக இந்திய ஊடகங்கள்  அதிகளவு கரிசனையை வெளியிட்டன.

அவ்வேளை சீன பிரதிநிதிகள் குழு தனக்கே உரிய தனித்துவமான பாணியில் அதனை செய்தது,தூதுவரும் அவரது குழுவினரும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர், அவர்கள் உள்ளுர் சம்பிரதாயங்களையும் பின்பற்றினர் வேஷ்டி அணிந்த அவர்கள் மேற்சட்டையின்றி ஆலயத்திற்குள் சென்றனர்.

யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவர்களை கவருவதே இதன் நோக்கம்.

இலங்கையின் வடக்குகிழக்கும் இரண்டு தனி மாகாணங்கள் -இந்த இரண்டு மாகாணங்கள் குறித்தும் இந்தியாவிற்கு விசேடமான மூலோபாய கலாச்சார அரசியல் நலன்கள் உள்ளன,இதன் காரணமாக இந்த மாகாணங்களில் சீனாவின் பிரசன்னத்தை தடுப்பதற்கு இந்தியா முயலும்.

பிரதான தமிழ்அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு சீனா தமிழர் பகுதிகளிற்குள் வருவது குறித்து  கரிசனை வெளியி;ட்டுள்ளது.

எனினும் நாங்கள் இலங்கையின் வடக்கிற்கு மாத்திரம் செல்லவில்லை  தெற்கிற்கும் செல்கின்றோம் என சீன தரப்பு தெரிவிக்கின்றது.தனது விவகாரங்கள் குறித்து இலங்கையே தீர்மானிக்கவேண்டும் வெளியாட்கள் தீர்மானிக்க கூடாது எனவும் சீனா கருதுகின்றது.இலங்கை இந்தியாவின் நெருங்கிய அயல்நாடு அது இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்கவேண்டும்.

இதேவேளை இந்தியாவின் எதிர்ப்புகளிற்கு அஞ்சி சீனா பி;ன்வாங்க தயாரில்லை,இந்த இரண்டு மாகாணங்களினதும் மீன்பிடித்துறையில் அதிகளவு முதலீடு செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிகழ்வுகளிற்காக சமீபத்தில் சீனாவிற்கு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றவேளை மீன்பிடித்துறைக்காக 1500 மில்லியனை வழங்குவதாக சீனா உறுதியளித்தது.

இதில் 500 மில்லியனை  மீனவர்களிற்கு வீடுகளை அமைப்பதற்கும் ஏனைய 500 மில்லியனை மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்தவுள்ளதாகவும் ஏனைய 500 மில்லியனை மீனவர் குடு;ம்பங்களின் உலர்உணவுகளிற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனா மிகவும் ஆழமாக ஆராய்ந்து வடபகுதி மீன்பிடித்துறையை தெரிவு செய்துள்ளது.வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்,இது நீண்டகால விவகாரம் ,இலங்கை இந்தியாவின் தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் இதற்கு தீர்வை காண்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

வடக்குகிழக்கில் மீன்பிடித்துறையில் சீனாவின் அதிகரித்த பிரசன்னம் நிச்சயம் இந்தியாவிற்கு கரிசனையை ஏற்படுத்தும்,எனினும் இலங்கை இந்த உதவிகளை ஏற்றுக்கொள்ளும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பொறுத்தவரை வடபகுதி மீனவர்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு அவர் முயற்சிப்பதற்கு ஆழமான காரணங்கள் உள்ளன,அவரது  தேர்தல்வாக்கு வங்கி மீனவர்களே-தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இந்த சமூகத்தினர்.

வடக்கில் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்காக எவரினது உதவியையும் பெற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் நிர்பந்தத்தில் அமைச்சர் காணப்படுகின்றார்.

இதேவேளை சமீபத்தில் இலங்கையி;ல் மீன்பிடிதுறையை அபிவிருத்தி செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக இந்திய பிரதிநிதிகள்குழுவினரும் சமீபத்தில் அமைச்சரை சந்தித்தனர்.

அமைச்சர் தனக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் அதனால் இரண்டு நாடுகளுக்கும் நன்மை ஏற்படும்.